கமுதியில் மாசிக்களரி திருவிழா : 1008 விளக்கு பூஜை
ADDED :1030 days ago
கமுதி: கமுதி அருகே கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் கோயிலின் 46ம் ஆண்டு மகா சிவராத்திரி மாசிக்களரி திருவிழா நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான கடந்த 18ம் தேதி பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடந்தது.1008 விளக்கு பூஜை நடந்தது. இதற்கு முன்னதாக கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. விளக்கு பூஜையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.