சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :959 days ago
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாசி 2வது வியாழக்கிழமை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.