உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோயிலில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயிலில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம்

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் இன்று மாலை நடக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்திற்காக யாகசாலை பூஜை நடந்தது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் புதிய தேருக்கான வெள்ளோட்டம் இன்று நடைபெற உள்ளது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பழமையான தேருக்குப் பதிலாக ரூ 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட புதிய தேர் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.தேர் வெள்ளோட்டத்திற்காக யாகசாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி, தேரோட்டம் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறவிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !