அங்காளம்மன் கோவில் திருவிழா : பெண்கள் முளைப்பாரி ஏந்தி சென்று வழிபாடு
ADDED :960 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அங்காளம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பெண்கள் முளைப் பாரி ஏந்தி சென்று வழிப்பட்டனர். உளுந்துார்பேட்டை நகராட்சி, உள்பேட்டை பகுதி அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாகச் சென்று கைலாசநாதர் கோவில் குளக்கரையில் வைத்து வழிபட்டனர். அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் விதியுலா நடந்தது. ஏராளமானோர் வழிபட்டனர்.