ராமகிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :962 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப்பள்ளியில் ராமகிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி தாளாளர் சோமநாராயணன் தலைமையில் நடந்தது. காலையில் வேதபாராயணம், அபிராமி அந்தாதி,திருமுறை பாராயணத்தை தொடர்ந்து கூட்டு ஆராதனை நடந்தது. மாலையில் பரிசளிப்பு விழா சுவாமி அர்க் பிரபானந்தா தலைமையில் நடந்தது. சுவாமி மாத்ரூ சேவானந்தா முன்னிலை வகித்தார். திருமூர்த்தி வரவேற்றார். ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி. பரிசு வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி, இலக்கிய மேகம் சீனிவாசன் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.