உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை  கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை கணக்கிடும் பணி இன்று கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி முன்னிலையில் கணக்கிடப்பட்டது .அதில் ரொக்க பணமாக ஒரு கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 181 ரூபா, தங்கம் 45 கிராம் ; வெள்ளி ஒரு கிலோ 700 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம்  இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இதற்கு முன்னர் கடந்த 2.2.2023 அன்று உண்டியல் பணம் கணக்கிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !