உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னக்காயல் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா

புன்னக்காயல் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா

ஆத்தூர்: புன்னக்காயலில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திருவிழா சப்பரப் பவனியுடன் நடந்தது. புன்னக்காயல் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு திருப்பலி ஆராதனை மறையுரை நடந்தது. 7ம் தேதி புனித ராஜகள்ளி மாதா ஆலயத்திலிருந்து துவங்கி வேளாங்கண்ணி மாதா திருவுருவ சப்பரப்பவனி நடந்தது. பின்னர் சேதுக்குவாய்த்தான் பங்குத் தந்தை விக்டர் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையும் நடந்தது. திருவிழா தினமான 8ம் தேதி காலையில் மறைமாவட்ட சிறைப்பணி பொறுப்பாளர் ஜெயகர் தலைமையில் உவரி துணை பங்குத்தந்தை உபர்ட்டஸ், புன்னக்காயல் துணை பங்குத்தந்தை கோயில்மணி ஆகியோர் இணைந்து திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். பின்னர் கொடியிறக்கம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்செல்வம், ஊர்க்கமிட்டித் தலைவர் தாமஸ்கொறைரா, பொருளாளர் சுகுமார் கொறைரா உட்பட பலர் செய்திருந்தனர். திருவிழா நிகழ்ச்சிகளில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !