புதியம்புத்தூர் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :4777 days ago
புதியம்புத்தூர்: புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோயிலின் வருஷாபிஷேக விழா 16ம் தேதி நடக்கிறது. புதியம்புத்தூர் குலசேகரவல்லி சமேத குலசேகரநாதர் திருக்கோயில் வருஷாபிஷேக விழா காலை 8 மணிக்கு கணபதி பூஜை, புண்யாசவ ஜனம் கும்பபூஜை, ஜபம் ஹோமம், பூர்ணாதுகுதி பூஜையுடன் துவங்குகிறது. 10 மணிக்கு விமான அபிஷேகம், சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரத்துடன் சுவாமி அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடக்கிறது. நண்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.