வேதாரண்யம் அண்டர்காடு திரவுபதி அம்மன் கோவில் தீ மிதிவிழா
ADDED :4777 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு திரவுபதி அம்மன் கோவில் தீ மிதித்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து, 10 நாட்களாக நடந்த நிகழ்ச்சியில் அம்மன் வீதியுலா காட்சியும், திரவுபதி கதாகாலச்ஷேபமும் நடந்தது. பின்னர் தீ மிதி விழாவில் காலையில் துரியோதனன், துச்சாதனன் படுகளமும், திரவுபதியின் கூந்தல் முடிக்கும் வைபவம் நடத்தப்பட்டது. மாலையில் நடந்த தீ மிதி வேண்டுதல் நிகழ்ச்சியில், 50 பக்தர்கள் பங்கேற்றனர்.