அலங்காநல்லூர் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வருடாபிஷேகம்
ADDED :4777 days ago
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே மேலச்சின்னனம்பட்டியில் ஸ்ரீமூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று இங்குள்ள காமாட்சியம்மன், விநாயகர், கருப்பணசுவாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேகம் நடந்தது. கருப்பையா எம்.எல்.ஏ., பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன், ஊராட்சி தலைவர் பழனியப்பகவுண்டர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.