உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கணான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கணான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருநெல்வேலி: சங்கணான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயிலில் இன்று (12ம் தேதி) கும்பாபிஷேக விழா நடக்கிறது. சங்கணான்குளம் பழவூர் இசக்கியம்மன் கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடத்தப்பட்டுள்ளது. இக் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் தீர்த்தம் எடுத்துவருதல், மிருத்சங்கர்ண பூஜை, பாலிகை பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்கார பூஜை, ரக்ஷா பந்தனம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், முதல் யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை, மூலமந்திர ஹோமம் நடந்தது. இரவு 9.30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. யந்திரஸ்தாபனம், சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.

12ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசன பூஜை, வேதிகை பூஜை, மூல மந்திர ஹோமம், திரவிய ஹோமம், மூலிகை ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.05 மணிக்கு ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, யாகசாலை வலம் வருதல் நடக்கிறது. காலை 9.40 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை ரெங்கராஜபட்டர், மூர்த்திபட்டர் குழுவினர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !