சாத்தூரில் கிருஷ்ணஜெயந்தி விழா
ADDED :4777 days ago
சாத்தூர் : சாத்தூர் யாதவர் சமுதாய நவநீதகிருஷ்ணன் கோயிலில்,கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. காலை 6மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. காலை 11 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி புஷ்பம் அலங்காரத்தில், கருடவாகனத்தில் வீற்றிருக்க, நகரின் முக்கிய வீதிகள் நகர் வலம் நடந்தது. நகராட்சித்தலைவர் டெய்சிராணி துவக்கி வைத்தார்.
சாத்தூர் யாதவர் சமுதாய தலைவர் ரா.ராமராஜ், துணைத்தலைவர் எம்.வேலுச்சாமி,செயலாளர் எம்.நாகராஜன், எம்.சரவணக்குமார், கணக்கர் கருப்பசாமி,சோமசுந்தரம், முருகன், இளைஞர் அணி எம். கருப்பசாமி, ஈஸ்வரன்,தொழில் அதிபர்கள் சுந்தரராஜன், செல்லப்பெருமாள், கே.ஆர்.கண்ணன், எல்.எஸ்.முருகன், எஸ்.என்.கருப்பசாமி கலந்து கொண்டனர்.