உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கிட்டன்குறிச்சியில் திருவாசக முற்றோதுதல் விழா

வெங்கிட்டன்குறிச்சியில் திருவாசக முற்றோதுதல் விழா

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது.

பரமக்குடி கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக் கூட்டத்தின் சார்பில், மாதம் தோறும் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் திருவாசக முற்றோதுதல் விழா நடந்து வருகிறது. இதன்படி 23 வது மாத விழாவானது வெங்கிட்டன்குறிச்சி திருமூர்த்தி நாதர் சுயம்பு சிவன் கோயிலில் நடந்தது. இத்திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள நிலையில், முற்றிலும் சிதலமடைந்து சிவலிங்கம் மட்டுமே உள்ளது. இங்கு சிவனடியார் திருக் கூட்டத்தினர் நூற்றுக்கணக்கானோர் திருவாசகம் முற்றோதுதலை நிகழ்த்தினார். முன்னதாக நடராஜர் திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. மேலும் கயிலை வாத்தியம் முழங்க சிவனடியார்கள் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !