உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; மார்ச் 4 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; மார்ச் 4 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக மார்ச் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 4 பிரதோஷம் நாள் முதல் மார்ச் 7 பவுர்ணமி வரை, தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !