சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1048 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
குன்றக்குடி ஆதீனத்துக்குட்பட்ட இக்கோயில் மாசிமகத் திருவிழா பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடந்தது. காலை 9:30 மணிக்கு கோயில் முன்பாக உள்ள விநாயகர் சன்னதியில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் பிரியாவிடையுடன் ருதரகோடீஸ்வரரும், ஆத்மநாயகி அம்பாளும் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமண விருந்து நடத்தப்பட்டு பக்தர்கள் மொய் எழுதிச்சென்றனர்.