சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :956 days ago
ஊத்துக்கோட்டை:ஆரணி அடுத்த, சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். நேற்று, செவ்வாய்க்கிழமை ஆனதால், காலையில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். மூலவரை தரிசனம் செய்ய, கோவிலில் இருந்து வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டு மணி நேரத்திற்கு பின் தரிசனம் செய்தனர்.