ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்
ADDED :1059 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நடந்தது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பத்) திருவிழாவின் 8ம் நாளான இன்று முக்கிய வைபமான தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தெப்பத்தில் உபநாச்சியார்களுடன் நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.