வேளாங்கோடு தர்மபதியில் இந்திர வாகன பவனி
திக்கணங்கோடு: கப்பியறை அருகே வேளாங்கோடு த ர்மயுக த ர்மபதியில் 12ம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 22ம் தேதி திருக்கொடி ஏற்றுதலுடன் துவங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் காலை பணிவிடை , பள்ளி உணர்த்தல், உகபெருக்கு, சிவநாம ஜெபம், மாலை பணிவிடை, பால் நியமித்தல், அகிலத்திரட்டு உபநியாஸம், இரவு உகபெருக்கு, வாழப்படிப்பு, அன்னதர்மம் நடக்கிறது. விழாவில், 9ம் நாள் நேற்று காலை சிவநாம ஜெபம், மாலை நாதஸ்வரம், சிங்காரி மேளம், பஞ்ச வாத்திய இசை யுடன் அலங்கார வாகனத்தில் முத்துக்குடை அணிவகுப்புடன் அய்யாவின் இந்திர வாகன பவனி நடந்தது. பவனி தர்மபதியில் இருந்து தொடங்கி வை குண்டர் சந்திப்பு பொன்னன் விளை, பாத்திரமங்கலம், பிராயறவிளை, புலிமுகத்தான் குறிச்சி வழியாக குற்றியடைப்பு விளை அய்யாவை குண்டர் பதி சென்று இரவு த ர்மபதி வந்தடைந்தது. இதில், அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நிறைவு நாள் இன்று (3ம் தேதி) பகல் உச்சிப்படிப்பை தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு அய்யாவழி பக்தர்கள் காவி கொடி ஏந்திஊர்வலமாக தக்கலை பார்த்தசாரதி கோவில் சென்று அங்கிருந்து வாகனங்கள் மூலம் சாமிதோப்பு தலைமைபதிக்கு சென்று அய்யாவை தரிசிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை தர்மயுக தர்மபதி நிர்வாகத்த லைவர் பால்பாண்டியன், துணை த்தலைவர் கிருஷ்ணன், செயலாளர் அஜேஷ்குமார், துணை செயலாளர் கிருஷ்ணகுமாரி பென்னட், பொருளாளர் சவிதா விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.