/
கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
ADDED :1148 days ago
சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக கைலாயம் எனப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது இன்று (4ம் தேதி) கோலாகலமாக நடைடெபற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் அருள்பாலித்தார். வரும் மார்ச் 6ல் மாசி மகத்தை முன்னிட்டு, காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சுந்தர சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 63 நாயன்மார்கள் புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.