கல்லல் சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் மாசிமகத் தேரோட்டம்: நாளை தீர்த்தவாரி
ADDED :1052 days ago
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேரோட்ட விழா இன்று நடந்தது.
கல்லல், பகச்சால விநாயகர் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். மாசிமகத் தேர்த் திருவிழா கடந்த பிப்.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிபுறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு மேல் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை வந்தடைந்தது. நாளை காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டார சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.