உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமக குளம் தோன்றியது எப்படி?

மகாமக குளம் தோன்றியது எப்படி?

மகாமக குளம் உருவாகக் காரணமாக அமைந்த தலம் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில். கும்பகோணம் பாணாத்துறையில் இந்தக் கோவில் உள்ளது.  ஒருமுறை உலகம் அழிந்த காலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் பிரம்மனால் மிதக்க விடப்பட்ட அமுத குடத்தை வேடன் வடிவில் வந்த சிவன் ஒரு பாணத்தால் உடைத்தார். சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால், அந்த இடத்திற்கு பாணாத்துறை எனப் பெயர் ஏற்பட்டது. இங்கு கோவில் எழுப்பப்பட்டு, சிவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. சிவன் குடத்தை உடைத்ததும், அதிலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. சாகா மருந்தான அமுதத்தையே குளமாக்கி தந்த பாணபுரீஸ்வரரை வணங்குபவர்களுக்கு நீண்ட ஆயுளும், அழியாத புகழும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !