வடபழநி ஆண்டவர் கோயிலில் மாசி மக தீர்த்தவாரி : பக்தர்கள் தரிசனம்
ADDED :1042 days ago
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி நடைபெற்றது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் மாசி மகம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மாசி மகத்தை முன்னிட்டு இன்று (6ம் தேதி) சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி புறப்பாடில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.