தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்
ADDED :914 days ago
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழாவில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முதலில் சுவாமி தேரோட்டம் நடந்தது. தேரின் வடங்களை ஒருபுறம் ஆண்களும் ஒருபுறம் பெண்களும் திரளாக நின்று இழுத்துச் சென்றனர். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.