உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி வைபவம் : மூலவருக்கு மகா அபிஷேகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி வைபவம் : மூலவருக்கு மகா அபிஷேகம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. விழாவின் நிறைவாக நேற்று தீர்த்தவாரி வைபவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன் உமா உமாகவுரி சுவாமிகளான சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம்வந்து விழா மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 1:30 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடாகத்தில் திரிசூலத்தில் ரிஷபாவுடன் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் ரிஷபாவுக்கு புனித நீராடல் வைபவம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை பலம் வந்து மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !