உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் இன்று ஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூரில் இன்று ஆவணித் தேரோட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்தேரோட்டம் இன்று நடக்கிறது. இங்கு, ஆவணித்திருவிழா, செப்.,5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை 7 மணிக்கு நடக்கிறது. முதலில், விநாயகர் தேர், இரண்டாவதாக சுவாமி தேர், அடுத்து அம்பாள் தேர், அடுத்தடுத்து பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளைச் சுற்றி நிலைசேருகின்றன. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !