முதுகுளத்தூர் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1026 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயிலில் மாசி மாத பெளர்ணமி முன்னிட்டு விளக்குபூஜை நடந்தது.மூலவரான சீலைக்காரி அம்மனுக்கு பால், மஞ்சள்,சந்தனம்,பன்னீர்,திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம்,தீபாரனை நடந்தது. பின்பு 108 விளக்கு பூஜை நடந்தது.இதில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோன்று ஆனையூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாத பெளர்ணமி சிறப்புபூஜை நடந்தது.மூலவரான அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.