அப்பன் பெருமாள் கோயிலில் உலக நலன் வேண்டி லட்சார்ச்சனை
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் உலக நலன் வேண்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் உலக நலன் வேண்டியும் நல்ல மழை பொழிய வேண்டியும் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவிற்காக புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமாகி அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் ஏராளமானோர் சேர்ந்து லட்சார்ச்சனை பூஜை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பன் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.