உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா

காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கல்லணை காந்திகிராமம் மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முல்லை பெரியாறு கால்வாயில்ருந்து சக்தி கரகம், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !