உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜைக்கான டிக்கெட் கவுண்டர் திறப்பு

காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜைக்கான டிக்கெட் கவுண்டர் திறப்பு

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் புகழ் பெற்ற ஆன்மீக தலமாக சிறந்து விளங்குகிறது .இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்யவும் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபடவும் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களின் வசதிக்காக புதிதாக 500/ மற்றும் 750 ரூபாய் காண ராகு கேது சர்ப்ப தோஷ பூஜைக்கான டிக்கெட்( கவுண்டர் )மையத்தை இன்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் திறக்கப்பட்டனர் .இதே போல் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய 200 ரூபாய் டிக்கெட் மையத்தையும் திறந்து வைத்தனர். இதனை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !