பட்டமங்கலத்தில் கோயில் வளைவுக்கு கும்பாபிஷேகம்
ADDED :1015 days ago
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்பாள், நவகாளி அம்பாள் கோயில் அலங்கார வளைவுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலுக்கு அலங்கார வளைவு திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை யாக சாலை பூஜைகள் துவங்கி, முதல் கால யாக பூஜைகள் நடந்து இரவு பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தன. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து காலை 9:00 மணி அளவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நவகாளி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும்.