உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தினமலர் சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திண்டுக்கல்: உலக அமைதிக்காக தினமலர் நாளிதழ் சார்பில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் செப்.,16ம் தேதி  திருவிளக்கு பூஜை நடந்தது. வாசகர் நலனில் அக்கறை கொண்ட தினமலர் நாளிதழ், மாணவர்களுக்காக ஜெயித்து காட்டுவோம், வழிகாட்டி, அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் ஆலோசனை முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், உலகில் அமைதி, அன்பு தழைக்க வேண்டும் என்ற நோக்கில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்  எண்ணெய், திரி உட்பட பூஜை பொருட்கள் தினமலர் சார்பில், வழங்கப்பட்டன. திருவிளக்கு பூஜை மாலை 6.05 க்கு துவங்கி, 6.45 மணிக்கு தீபாராதனையுடன் முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !