/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தரிசனம்
ADDED :1273 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு நேற்று (வியாழக்கிழமை) மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (அப்சர்வேர்ஸ்) ரோகித் குமார், சௌரப், தீபக் குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் .கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.