உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று எட்டாம் நாள் விடையாற்றி உற்சவத்தில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த பிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 9ம் தேதி திருக்கல்யாணம் வைபவத்துடன் நிறைவடைந்தது. இதில், முக்கிய  விழாவாக, 3ம் தேதி தேர்த் திருவிழாவும், 6ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடந்து முடிந்தன. திருக்கல்யாணம் உற்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து, 13 நாட்களுக்கு, விடையாற்றி உற்சவம் நடப்பது  வழக்கம். அந்த வகையில், 8ம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. இதில், பகல் 11:00 மணிக்கு உற்சவர் கந்தசுவாமிக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனையும்,  அர்ச்சனையும் நடந்தன. விழாவில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !