உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மகரசங்கராந்தியில் திறப்பு

அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மகரசங்கராந்தியில் திறப்பு

புதுடில்லி, உ.பி.யில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2024, ஜனவரியில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்து  உள்ளது.அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, கூறியதாவது:கர்ப்பக்கிரகத்தில் ராமர் விக்கிரகத்தை நிர்மாணிக்கும் பணி 2024, ஜன., மூன்றாவது வாரத்தில் முடியும்.  மகரசங்கராந்தியின் போது 2024, ஜன., 14 - 15ம் தேதிகளில், பொது மக்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !