பக்தவத்சல பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
ADDED :970 days ago
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில், பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, இரண்டாவது நாள் திருத்தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், உற்சவ பெருமாள் சிறப்பு வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் தக்கார் சத்திய நாராயணன், செயல் அலுவலர் நித்தியானந்தம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.