சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED :1077 days ago
நெல்லிக்குப்பம், : மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவிலில், சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் மட்டுமே நந்தி பகவானுக்கும், சரபேஸ்வரருக்கும் பூஜைகள் நடப்பதை ஒரே இடத்தில் நின்று தரிசிக்க முடியும். நேற்று பிரதோஷம் என்பதால் நந்தி பகவானுக்கும், ராகுகாலத்தில் சரபேஸ்வரருக்கும் ஒரே சமயத்தில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானும, சரபேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை வாகீசன் குருக்கள் செய்தார்.