உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பிரசன்ன வரதராஜசுவாமி கோயில் அடித்தளத்தில் படிக்கட்டுகள் கண்டுபிடிப்பு

காளஹஸ்தி பிரசன்ன வரதராஜசுவாமி கோயில் அடித்தளத்தில் படிக்கட்டுகள் கண்டுபிடிப்பு

திருப்பதி, காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வரதராஜசுவாமி கோயிலின் புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, அடித்தளத்தில் மக்கள் படிக்கட்டுகள் வழியாக கோயிலுக்குள் செல்வது தெரியவந்துள்ளது.

 ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான  ஸ்ரீ பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோவிலை புனரமைப்பதற்காக, பழமை வாய்ந்த கோவிலின் அஸ்திவாரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கோயில் அஸ்திவாரத்தில் (அடிக்கல்)கட்டப்பட்ட படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.மேலும் கோவில் வளாகம் உயரமாக இல்லாததால், அஸ்திவாரத்தின் மீது கோவில் கட்டப்பட்டதாகவும், (கல்லினால்)  கல் படிகள் வழியாக கோயிலுக்குள் சென்றதாகவும் தெரிகிறது.மேலும், கீழ் பகுதியில் காணப்படும் கல்லினால் கட்டப் பட்டுள்ள கட்டிடத்தில் நுண்ணிய சிற்பங்கள் கவரும் வகையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !