உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்ட ராமர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

கோதண்ட ராமர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ திருவிழாவை  முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடைபெற்றது. தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட, கஜ வாகனங்களில் சுவாமி  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மார்ச்.7 ல் திருக்கல்யாணம், மார்ச். 9ல் திருத்தேர் உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோதண்டராமஸ்வாமி கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !