உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலூர் சுந்தர விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலூர் சுந்தர விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொங்கலூர்: பொங்கலூர் கருங்காலி பாளையம் சுந்தர விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து தீர்த்த கலசம், கோபுர கலசம், முளைப்பாளிகை எடுத்து வரப்பட்டது. வா நேற்று மாலை வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, கோபுரத்தில் கண் திறத்தல், கோபுர கலசம் வைத்தல், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் ஆகியன நடந்தது. இன்று காலை சூர்ய கும்ப பூஜை, துவார பூஜை, மண்டவார்ச்சனை, வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்படுதல் ஆகியன நடந்தது. காலை, 9:30 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கண்டியன்கோவில் ஆதீனம் சிவசுப்பிரமணிய குருக்கள், தங்கமணி குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசனம் தசதானம், மகா தீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !