எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா
ADDED :930 days ago
பரமக்குடி: எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி நடந்து வருகிறது. இக்கோயிலில் மார்ச் 22 ல் ராம நவமி விழா துவங்கியது. தினமும் ஆஞ்சநேயர் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 30 காலை ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.