மருதாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :931 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் மருதாருடைய அய்யனார்,கருப்பர், ராக்கச்சி உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்,இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்பு மங்கல இசை, வேதபாராயணம், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், தீபாரதனை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. கடம் புறப்பாட்டுக்கு பின்பு முத்துக்குமார சிவாச்சாரியார் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மருதாருடைய அய்யனார்,கருப்பர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம்,இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் சிறப்புபூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.