மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :978 days ago
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், நடக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், பல மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் பங்கேற்கின்றனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் வருகிற 26ம் தேதி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் ஆகியோர், ஆசியுரை வழங்குகின்றனர். திருவாசக சித்தர் தாமோதரன் திருவாசக முற்றோதலை நிகழ்த்துகிறார், முன்னதாக 63 நாயன்மார்களுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் இதில் பங்கேற்று திருவாசகம் வாசிக்க உள்ளனர். சிவ பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறையருள் பெற, திருவாசகம் முற்றோதல் கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.