உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பங்குனி உத்திர விழா, இன்று, காலை 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டு, நாளை மறுநாள், காலை 9;00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதைத்  தொடர்ந்து, 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின், 7ம் நாளான  ஏப்., 1ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து, ஏப்., 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் ஊஞ்சலும், 7ம் தேதி, இரவு 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார்  வீதியுலாவும் நடைபெறும். பின் அன்றிரவு காரைக்கால் அம்மையார் ஐக்கிய காட்சி நடைபெறும். கொரோனா தொற்றுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளதால்  உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !