சிருங்கேரி பீடாதிபதி மகா சன்னிதான வர்தந்தி மகோத்சவம்
ADDED :932 days ago
நாகர்கோவில்: நாகர்கோவில், வடிவீஸ்வரம் பள்ளத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில், சிருங்கேரி பீடாதிபதி மகா சன்னிதானத்தின் 73வது வர்தந்தி மகோத்சவம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. 27ம்தேதி காலை கணபதி ஹோமம், கும்ப பூஜை , அபிஷேகம், தேவி மகாத்மியபாராயணம், ஸ்ரீ பாதபூஜை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சத்குருவின் பரிபூரண அருளைப்பெறும்படி சிருங்கேரி மடத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9443486861 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.