உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உபய திருமஞ்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உபய திருமஞ்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உபய திருமஞ்சனம் செய்து, அக்கார அடிசில் சமர்பித்து கர்நாடக எதுகிரி எத்திராஜா ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார். நேற்று காலை ஆண்டாள் கோயிலில் விஸ்வரூப தரிசனம், காலை 10:00 மணிக்கு மேல் உபய திருமஞ்சனம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்க மன்னார் முன்பு, 100 தடாக்களில் அக்காரா அடிசில் சமர்ப்பித்து தரிசனம் செய்தார். விழாவில் ஏராளமான உள்ளூர் பக்தர்களும், கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !