உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனிமாதம் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் மூலவர் பெருமானின் ஜென்ம நட்சத்திரம் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !