மலைப்பட்டி முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
                              ADDED :951 days ago 
                            
                          
                           உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உள்ளது மலைப்பட்டி கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. இன்று காலை அக்கினிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலமும், தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடுகள் நடத்தினர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று முறுக்கு, தோசை உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் பங்குனி பொங்கல் விழாவிற்காக வருகை தந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.