காமாட்சிபுரத்தில் கும்பாபிஷேகம்
ADDED :951 days ago
வத்தலகுண்டு: வத்தலக்குண்டு காமாட்சிபுரத்தில் அங்காள ஈஸ்வரி, வீரபத்திரன், நொண்டி கருப்பசாமி, சங்கிலி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜை ஆகியவற்றுடன் முதலாம் கால யாக பூஜை துவங்கியது. தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை கோபூஜை, இரண்டாம் காலையாக பூஜை துவங்கி மகாபூர்ண யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது. பின் புனித தீர்த்தங்கள் கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மதுரை ஸ்ரீராம் சர்மா கும்பாபிஷேகத்தை நடத்தினார். கிராம பொதுமக்கள் ஆயிவைசிய செட்டியார் பங்காளிகள் பங்கேற்றனர்.