உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு

பாலமேடு: பாலமேடு அருகே எர்ரம்பட்டி கிராம விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், அம்மச்சியம்மன், மடை கருப்பு கோயில் கும்பாபிஷேகம் பிப்.,5ல் நடந்தது. அம்மன், சுவாமிகளுக்கு கடந்த 48 நாட்களாக தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தன. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா யாக பூஜைகள் முடிந்து புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !