பழநி கோயிலில் மாத கார்த்திகை விளக்கு பூஜை
ADDED :1263 days ago
பழநி: பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி மலைக்கோயிலில் மார்கழி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்தனர்.